சாலை மேம்பாட்டு திட்ட பணிகள் துவக்கம்

கோவை, கிழக்கு மண்டலத்தில் ரூ.12 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று 06.02.2021 துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். கோவை கிழக்கு மண்டலத்தில் சிறப்பு சாலைகள் திட்டத்தின்கீழ் வார்டு எண்.32 மற்றும் 37க்குட்பட்ட பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொடிசியா சாலை, அவினாசி சாலை முதல் எஸ்.பெண்ட் வரை மற்றும் குமுதம் நகர் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலையை புதுப்பிக்கும் பணிக்கும், விளாங்குறிச்சி சாலை மகேஷ்வரி நகர் முதல் மாநகராட்சி எல்லை வரை மற்றும் சேரன் மாநகர் பிரதான சாலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பிக்கும் பணிக்கும், வார்டு எண்.32 சேரன் மாநகரில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் மலர்அவென்யூ மற்றும் சக்தி நகரில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினை, ஆகமொத்தம் ரூ.12 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டிலான தார் சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினை ஊரக வளர்ச்சிஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.