டெல்லியில் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பில் கலந்துகொண்ட மாணவிக்கு குவியும் பாராட்டு !

26.01.2021 அன்று டெல்லியில் நடைபெற்ற 72வது குடியரசுதின அணிவகுப்புப் பேரணியில் கோவை, டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை கணிதவியல் மூன்றாமாண்டு பயிலும் நாட்டுநலப் பணித்திட்ட மாணவி ஸ்ரீ.சம்யுக்தா கலந்து கொண்டார். 1.1.2021 முதல் 24.1.2021 வரை டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பிற்கான பயிற்சியிலும் பங்குகொண்டு சிறப்பித்தார். மாணவி ஸ்ரீ.சம்யுக்தாவிற்கு கல்லூரியின் செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், முதன்மைச் செயல் அலுவலர் ஒ.டி.புவனேஷ்வரன், புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட  அலுவலர்கள் அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.