கேஐடி கல்லுரியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

கோவை அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சென்டர் ஃபார் இண்டஸ்ட்ரி இன்ஸ்டிடியூட் இன்டராக்சன் மையத்தின் சார்பில் ஹயிலைட், தி மிஷன், எலிவேட் என்னும் நிகழ்ச்சியை முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காகவும், சுய சார்புடையவர்களாக திகழ்வதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் மோகன் தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், சென்டர் ஃபார் இண்டஸ்ட்ரி இன்ஸ்டிடியூட் இன்டராக்சன் மையத்தின் தலைவர் மஹாலட்சுமி, கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.