மைய நூலகத்தில் 72 வது குடியரசு தின விழா

கோவை மாவட்ட மைய நூலகத்தில் 72 வது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை இன்று சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நிலை நூலகர் ரவிச்சந்திரன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். கோவை மாவட்ட மைய நூலகர் ராஜேந்திரன் விழாவிற்குத் தலைமையேற்று இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தலைமையுரையாற்றினார். இவ்விழாவில் மாவட்ட மைய நூலகத்தின் நூலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.