1500 குடும்பங்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகளை வழங்கிய அமைச்சர்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1500 குடும்பங்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மாநில கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலையில்லா கோழிக்குஞ்சுகளை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மேன்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுத்தி வந்து கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பேரூர், கரடிமடை, பூலுவாம்பட்டி, ஆலாந்துறை, மத்வராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1500 குடும்பங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கோழிகள் வீதம் 1500 குடும்பங்களுக்கு சுமார், 37 ஆயிரத்து 500 விலையில்லா கோழிகுஞ்சுகளும், பராமரிப்பு ஊக்கத்தொகையும், கட்சி பாகுபாடுகள் இன்றி அனைத்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலதிட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக 5 கல்லூரிகள், அதிகமான கல்லூரிகள், கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தடையில்லா குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். தமிழகத்தை பொருத்தவரை 5 ஆண்டுகளில் 50 ஆண்டு வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளது. என தெரிவித்தார்.