சாலையோரங்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம் பொது மக்களுக்கு ஆணையாளர் வேண்டுகோள்.!

கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் மடாலயம் ரோடு, ஜனதா நகரில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் தூய்மைப்பணியாளர்கள் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டுவரும் பணிகளை பார்வையிட்டார் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன்.

பின்னர் அப்பகுதியிலுள்ள மளிகைக்கடைகள், பூக்கடைகளில் விற்பனை செய்வோரிடம் குப்பைகளை சாலையோரங்களிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் குப்பைகளைக் கொட்டக் கூடாது. சுற்றுப்புறத்தை அனைவரும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருவோரிடம் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டுமென அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கணபதி, வ.ஊ.சி நகர், போலீஸ் காலனி சாலையில் செயல்பட்டு வந்த தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டியதற்காக அபராதம் விதித்தார். மேலும், போலீஸ் காலனியில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று வெப்பமானி மூலம் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணிகளை பார்வையிட்டர்.