தனியார் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

கோவை : பொள்ளாச்சியில் உள்ள கொண்டே கவுண்டன்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தகவல் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகிறார். மேலும், தனி இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளை உருவாக்கி தன்னுடைய கற்பித்தல் பணிகளை புதுமையான தொழில் நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்ப்பித்து வருகிறார். இவ்வாறு ஆன்லைன் மூலமாக கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் இவர் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வுகளையும் வைத்து அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி ஊக்குவித்து வருகிறார். இவரது கல்விச்சேவையை பாராட்டி இந்தியான் உலக சாதனை நிறுவனம் இவருக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

இவரது கல்விச் சேவையைப் பாராட்டி தன்னார்வ அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் இவருக்கு கல்வி ரத்னா விருது, ஆசிரியர் சிற்பி விருது, அப்துல்கலாம் அவர்களின் கனவு ஆசிரியர் விருது, அறிவு மாமணி விருது, அறிவுச்சுடர்காந்தி விருது மற்றும் தேசத்தின் சிற்பி விருது போன்ற பல விருதுகளை வழங்கி இவரை கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.