வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு

கோவை: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் (23.10.2020) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இணையதளம் வாயிலாக நடைபெற்றது. மொத்தம் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி பொது தரவரிசை பட்டியல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று (23.10.2020) வெள்ளிக்கிழமை பொது தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற மாணவர் முதலிடத்தை பெற்றுள்ளார். மேலும் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த கிரிவசன் என்பவர் இரண்டாமிடத்தையும், ராசிபுரம் பகுதியை சேர்ந்த புஷ்கலா என்ற மாணவி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக தரவரிசை பட்டியலில் மாணவிகளே முதலிடத்தைப் பெற்று வந்த சூழலில் இந்த ஆண்டு மாணவர் ஒருவர் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 28ம் தேதி அன்று சிறப்பு பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.