தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீ.சி. ஆறுக்குட்டி எம்எல்ஏ

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வீ.சி. ஆறுக்குட்டி எம்எல்ஏ தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது தொகுதிக்கு உட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்களின் அன்பினை ஏற்று கேக் வெட்டி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

இதில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பிஆர்ஜி. அருண்குமார், இன்ஜினியர் சந்திரசேகர், சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.