கேஐடி கலைஞர் கருணாநிதி கல்லூரி – ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கேஐடி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரிக்கும் ஹரியானா குர்கிராமில் உள்ள ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் இணைய வழியில் கையெழுத்திடப்பட்டது.

இதன் மூலம் தகவல்கள் கையாளும் முறைகளில் உள்ள அடிப்படையான தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாளுவதற்கான பயிற்சிகளும் வேலைவாய்ப்புகளையும் கேஐடி கலைஞர் கருணாநிதி  கல்லூரி மாணவர்களுக்கு பெற்று தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கேஐடி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன் மற்றும் ஹியர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப பிரிவின் தலைமை செயல் அதிகாரியுமான ரோஹித் கெளசிக் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தினர்.

மேலும் இதில் கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ் மற்றும் கல்லூரியின் தொழில் நிறுவன தொடர்புக்கான மையத்தின் டீன் மஹாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.