செம்மங்குடி மாமா சீனிவாச ஐயர்  பிறந்த தினம்

மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் 1908 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிறந்தார்.

இவர் திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவர் தனது முதல் இசை நிகழ்ச்சியை 1926 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அரங்கேற்றினார்.

மேலும், 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பிறகு பிரபலமானார். இவரை அனைவரும் செம்மங்குடி மாமா என்று அழைத்தனர்.

சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண், இசைப் பேரறிஞர், காளிதாஸ் சம்மான் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

அதிக மேடைகளில் பாடி சங்கீத மகாவித்வான் என்று போற்றப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் 2003ஆம் ஆண்டு மறைந்தார்.