காந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் காரணத்தினால் இன்று முதல் (06.07.2020) மாநகராட்சிக்குட்பட்ட சலிவன் வீதி, உப்பார வீதி, தாமஸ் வீதி, இடையர் வீதி, சுக்கிரவார் பேட்டை, தெலுங்கு வீதி, செந்திரும்மன் சந்து, மரக்கார நஞ்சப்பாகவுடர் வீதி, சுந்தரம் வீதி, குரும்பர் சந்து, கருப்பகவுண்டர் வீதி, பெரியகடை வீதி, காந்திபார்க் மற்றும் இராஜவீதி ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறை கடைகள் மறுஉத்தரவு வரும் வரை திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செட்டிவீதி பகுதிகளில் பறக்கும் படையினருடன் மாநகராட்சி ஆணையாளர் துணை ஆணையாளர் மற்றும் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
மேற்கண்ட பகுதிகளுக்குட்பட்ட நகைக்கடை மற்றும் நகைப்பட்டறை கடைகளில் பணியாற்றும் நபர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மைய எண்கள் 1077, 0422-2302323, மற்றும் 9750554321 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.