வெனிசுலாவின் மின்னல் ஏரி

தென் அமெரிக்க நாடான, வெனிசுலா நாட்டின், சூலியா என்ற இடத்தில், மரகாய்போ ஏரி உள்ளது. இங்கு, ஏப்ரல் முதல், நவம்பர் மாதம் வரை, எண்ணற்ற மின்னல்கள் உருவாகும். வருடத்தின் 260 இரவுகளிலும் மின்னல்கள் தாக்கும். அதி உயர் அதிர்வெண்களைக் கொண்ட மின்னல்கள் தொடர்ந்து இந்தப் பகுதியைத் தாக்கிக் கொண்டே இருக்கும். மின்னலை புகைப்படமாக்குவது இந்த இடத்தில் சாதாரணம். காரணம் அதிகமான மின்னல்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்குமாம். ஒரு நிமிடத்திற்கு, 18 முதல் 60 முறையும், மணிக்கு, 20 ஆயிரம் முறையும், மின்னல் இந்த ஏரியில் தாக்கப்படுகிறதாம். சுற்றியுள்ள சிகரங்களின் அமைப்பும், ஏரியின் ஈரப்பதம் போன்றவையின் காரணமாக இவ்வாறு மின்னல்கள் தாக்குவதாக கூறப்படுகிறது. இது, ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.