மாகாளியம்மன் குட்டை தூர்வாரும் பணி துவக்கம்

கோவை அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள மாகாளியம்மன் குட்டை தூர்வாரும் பணிகளை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் துவக்கி வைத்தார்.

கோவை அடுத்த சென்னனூர் பகுதியில் மாகாளியம்மன் குட்டை அமைந்துள்ளது. இந்த குட்டையில் தண்ணீர் தேங்கும் போது தண்ணீர் பந்தல், கரடிமடை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த இந்த குளத்தை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, ரவுண்ட் டேபிள் இந்தியா கோயம்புத்தூர் ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் 323 என்ற ரோட்டரி அமைப்பின் நிதியுதவியுடன் தூர்வார உள்ளது. இதற்கான பூமி பூஜையில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.