சீன மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம்

பொதுவாக கிழக்காசிய மக்களின் வாழ்வியல் கலாச்சாரமும், தென்னிந்திய மக்களின் வாழ்வியல் கலாச்சாரமும் ஒரே மாதிரியானது. குடும்ப உறவுகள், திருமண முறைகள், இறை வழிபாடு ஒரே மாதிரியாக இருக்கும். அதனால் தான் கொரியன் படங்களை சுட்டு இங்கு படமாக எடுத்து விடுகிறார்கள். இங்கு ஜாதி பாகுபாடு இருப்பது போன்று அங்கும் மஞ்சள் நிறத்தவர், சிவப்பு நிறத்தவர் பாகுபாடு உண்டு. புத்த மதத்தினர், பாரம்பரிய மதத்தினர் என்ற பாகுபாடும் உண்டு.

பல தமிழ் படங்களை தழுவி சீனாவில் படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தை முறைப்படி உரிமம் வாங்கி ரீமேக் செய்கிறார்கள். தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த படம் அசுரன். கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, வெங்கடேஷ் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

தெலுங்கில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்க நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சிவராஜ் குமார் நடிக்க கன்னட மொழியிலும் ரீமேக் ஆகிறது. சீன மொழி ரீமேக் தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சீன மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை அசுரன் பெற இருக்கிறது.