‘பர்பிள் ஹார்ட்’ ஜான் எஃப் கென்னடி

உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி 1917ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது இவர் அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக இருந்தார். அப்போது ஒரு வீரரைக் காப்பாற்றி சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். இச்செயலுக்காக ‘பர்பிள் ஹார்ட்’ என்ற வீரப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

போரின் முடிவில் இவர் அரசியலுக்குத் திரும்பினார். இவர் எழுதிய  profiles in courage என்ற நூலுக்காக 1957ஆம் ஆண்டு ‘புலிட்சர் பரிசு’ வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 35வது அதிபராக 43வது வயதில் பதவி ஏற்றார்.

உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட, மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த இவர் 1963ஆம் ஆண்டு மறைந்தார்.