உலக பட்டினி தினம்

உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று அப்போதே பாரதியார் பாடினார்.

ஆனால், உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் ஒரு மனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, பசி மற்றும் வறுமைக்கு நிலையானத் தீர்வுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கமாகும்.