நடிகர்கள் வேடமிட்டு மனு அளித்த நாட்டுப்புறக் கலைஞர்கள்

கோவையில் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், சந்திரபாபு ஆகியோர் வேடமணிந்து வந்து, கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண நிதியுதவி வழங்க கோரி மனு அளித்தனர்.

கொரோனா ஊரடங்கினால் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், சந்திரபாபு ஆகியோர் வேடமணிந்து வந்து கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேடை நடன தொழிலை நம்பியுள்ள கலைஞர்களுக்கு பிப்ரவரி முதல் ஜீன் மாதம் வரையிலான சீசன் வருமானமே வாழ்வாதாரமாக இருந்து வந்ததாகவும், கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் முடங்கியுள்ளதாகவும் நடன கலைஞர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இவர்கள் அளித்த மனுவின் மூலம் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமெனவும், அரசு சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளில் வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.