கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள்

கோவையில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் கோவை மாநகரத்தில் இனி கொரோனா நம்மிடம் வருவதற்கு முன் எப்படி அடித்து விரட்ட வேண்டும் என்பதை கிரிக்கெட் மட்டையால் அடித்து  வீழ்த்தி குழந்தைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தற்போது உலகெங்கும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் தமிழகத்தில் முக்கிய நகரமான சென்னை பகுதியில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை ஒழிப்பதற்கான பணிகளை அரசு எடுத்து வருகிறது.

தென்னிந்தியாவின் தொழில் நகரமான கோவையில் முழுமையாக கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றி, இந்த நோய் தொற்று வரக்கூடாது என்பதற்காக கோவை மாநகர காவல் துறை சார்பில் சாலையோரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பீளமேடு காவல்துறை சார்பாக சிறு குழந்தைகளின் நடனங்களின் மூலம்  சாலையில் செல்லும் மக்களுக்கு முக கவசம், கை கழுவுதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும், கொரோனா வருவதற்கு முன் எப்படி அடித்து விரட்ட வேண்டும் என்பதை கிரிக்கெட் மட்டையால் அடித்து  வீழ்த்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.