உலக தொலைத்தொடர்பு தினம்

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத்தொடர்புத் துறையும் ஒன்றாகும். தகவல் தொடர்புக்கென முதன்முதலாக 1865 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி பாரிசில் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டது.
பின்பு, உலகத் தொலைத்தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இணையம் மற்றும் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகத் தொலைத்தொடர்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும், இச்சங்கம் உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.