கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கிருமி நாசினி சோப்பு திரவம் வழங்கல்

கொரோனா வைரஸின் தொற்றை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசின் சிறப்பான நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் கோவை தெற்கு தொகுதி சார்ந்த மக்களுக்கு கோவை மக்கள் சேவை மையத்தின் தலைவர் வானதி சீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின் படி அந்த அமைப்பின் சார்பில் கிருமி நாசினி சோப்பு திரவம் 3000 பாட்டில்கள் வழங்கப்பட்டது . அதனுடன் கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்படுகிறது.