கொரோனா நோய் தடுப்பு பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடவத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் சிறிய மோட்டார் பொருந்திய கிருமி நாசினி தெளிப்பான் கருவிகள் 50 வீதம் 250 கருவிகளும், சிறிய ஆளில்லா விமானம் கருவி மூலம் மருந்து தெளிக்கும் மாதிரி செயல்விளக்கத்தையும், மண்டலத்திற்கு 1 வாகனம் வீதம் 5 வாகனங்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு பணிகளும் 1000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் பொருந்திய 25 வாகனங்களின் பணிகளையும், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு கையுறை, முகக்கவசம் ஆகிய உபகரணங்கள் வழங்கும் பணிகளையும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.