இன்று இரவு 7 மணிக்கு முதல்வர் தமிழக மக்களிடம் உரை !

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார். தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு சட்டம் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகிவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைக்கான கடைகள் தவிர்த்து டீக்கடை உட்பட அனைத்து கடைகளையும் மூட உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Source : Puthiyathalaimurai