அச்சம் தவிர்ப்போம்! மீண்டு வருவோம்!

–  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களுக்கு வேண்டுகோள்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் மிக பெரிய உயிரிழப்பு ஏற்படுகிறது. ‘வரும் முன் காப்போம்’ என்பதற்கேற்ப முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து துறைகளும் முதலமைச்சர் உத்தரவிற்கேற்ப வேகமாக செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் இருமல், தும்மல் வரும் பொழுது கைக்குட்டை அல்லது கை துண்டு வைத்து மூக்கு மற்றும் வாயை மூடி கொள்ள வேண்டும். தினமும் ஒருநாளைக்கு 15 முறைக்கு குறையாமல் சேனிடைசர் அல்லது சோப்பை பயன்படுத்தி கைகளை சுத்தபடுத்தி கொள்ள வேண்டும். இருமல், சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அடிக்கடி கண், மூக்கு மற்றும் வாய் பகுதிகளை தொடக்கூடாது. 10 வயதிற்குள் 60 வயதிற்கு மேல் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வைட்டமின் சி உள்ள உணவு பொருட்களை எடுத்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் தயவு செய்து கூட்டம்  கூட வேண்டாம். பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

கொரோனா நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளிநாடு, மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கவனமாக இருப்போம், அச்சம் தவிர்ப்போம், மீண்டு வருவோம்.