அசல் மதிப்பு கொண்ட செயற்கை வைரங்கள்

பலநூற்றண்டுகள் மண்ணில் புதைந்து கரியாகிய மரங்களும், செடிகளும் தான் வைரங்களாக மாறுகின்றன. இது வெறுமனே தரையில் கிடைப்பதல்ல, பலஅடி பூமிக்கடியில் தோண்டி தான் இதனை எடுக்க முடியும். அதையும் அப்படியே பயன்படுத்த முடியாது. அதற்கு சில முறைகள் இருக்கின்றன. இதற்கு என்றும் மதிப்பு குறைந்ததே இல்லை.

இப்படி இது விலைமதிப்பற்ற பொருளாக இருந்தாலும் சுரங்க தொழிலில் நடைபெறும் அநீதியால் இதனை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு மாற்றாக பிரான்ஸ் மற்றும் ரஸ்யாவில் தயாரிக்கப்படும் செயற்கை வைரத்தை வைத்தே இனி நகைகள் தயாரிக்கப்படும் என்ற முடிவை எடுத்திருக்கிறது பரிசிலுள்ள கோர் பெட் என்ற வைர வடிவமைப்பு நிறுவனம். இது முழுவதும் ஆய்வகத்தில் உருவாக்கப்படுவது. இதற்கு இயற்கை வைரத்திற்கு இருக்கும் அத்தனை மதிப்புகளும் இருப்பதால், சுரங்க வைரம் வாங்க தயங்குவோர், இதை விரும்பி வாங்க துவங்கியுள்ளனர்.

எனவே, தொழில் நுட்பத்தின் மூலம் கிடைத்த வைரத்திற்க்கும் இனி மவுசு கூடும் என கோர் பெட் என்ற வைர நிறுவன வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தகவல் : தினமலர்