ஆய்வு பயிற்சிக்கு கனடா செல்லும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவன்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஏரோனாட்டிகள் இன்ஜினியரிங் பயிலும் மாணவன் ச.குமார் பிராபாகரனுக்கு சாஸ்திரி இண்டோ கனடியன் இன்ஸ்டிடியூட் மைடெக்ஸ் கூட்டாண்மை திட்டத்தின் மூலமாக  கனடா மொன்றியல் நகரில் அமைந்துள்ள இன்ஸ்டிடியூட் நேஷனல் டீ ல ரிசெர்ச் சயின்டிபிக் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தின் வாயிலாய் ஒவ்வொரு ஆண்டும் கனடாவிற்கு ஐயாயிரம் மாணவர்கள் இந்தியா, இங்கிலாந்து, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தருகிறார்கள். இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 100 முதல் 120 மாணவர்கள் வரை தேர்வாகிறார்கள் இப்பயிற்சி காலம் மே மாதம் முதல் ஜூலை 2020 வரையான மூன்று மாதமும் மாணவனுக்கு உதவித்தொகை மற்றும் இதர செல்வுகளுக்கான தொகையையும் மைடெக்ஸ் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாணவனை எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் அலமேலு ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.