உடல், மன நலத்தை உடற்பயிற்சியும், விளையாட்டும் பாதுகாக்கும்

கொங்குநாடு கலை கல்லூரியின் விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினர் அன்பழகன்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 47 ஆவது விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறையின் இணைப்பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இவர் பேசுகையில், விளையாட்டால் ஒழுக்கமும், குழுவுணர்வும் மேம்படும் என்றும் மனநலத்தையும், உடல் நலத்தையும் பேணிக் காப்பதற்கு உடற்பயிற்சியும், விளையாட்டும் துணை செய்யும். துணிச்சல், தன்னம்பிக்கை, ஈடுபாடு ஆகியவற்றுடன் எந்தவொரு செயலையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் விட்டுக்கொடுத்து செல்வது வாழ்க்கையில் ஒருவரை மேம்படுத்தும் என்றார்.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் லட்சுமணசாமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையுரையாற்றினார்.

இதனை தொடர்ந்து கல்லுரி உடற்கல்வித்துறையின் இயக்குநர் பி.கே. கவிதாஸ்ரீ இந்த ஆண்டிற்கான விளையாடறிக்கையை வாசித்தார். விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவின் நிறைவில் விளையாட்டுச் செயலர் சி.எஸ்.ஸ்ரீஜா நன்றியுரை வழங்கினார்.