வி.எல்.பி ஜானகியம்மாள் கலைக் கல்லூரியில் தேசிய அளவிலான சமையல் போட்டி

கோவைப்புதூர் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை சார்பாக “ஸ்வாட் – 2020 தேசிய அளவிலான அனைத்துக் கல்லூரி சமையல் போட்டி” நடைபெற்றது.

கல்லூரியின் உணவு மேலாண்மைத் துறையும் தென்னிந்திய சமையல்காரர்கள் சங்கம் (சிகா) இணைந்து இந்நிகழ்வை நிகழ்த்தியது. இதில் கர்நாடகாவிலிருந்து 25 கல்லூரிகள், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பங்கேற்றன. பெங்களுர் தி ஆர் மி உணவு மேலாண்மை நிறுவனம் முதல்பரிசை வென்றது. இந்திய சமையல் நிறுவனம் இரண்டாம் இடத்தை வென்றது. விழாவில் செஃப் ஸ்ரேயா அட்கா, நிர்வாக செஃப் மற்றும் கூட்டாளர், பிரெஞ்சு டோர் உணவகம் மற்றும் கஃபே, கோயம்புத்தூர் வெல்கம் ஹோட்டல். ஐ.டி.சி நிர்வாக செஃப் பிதுபூஷன் தாஸ் மற்றும் கோயம்புத்தூர் ஹரிபவனம், நிர்வாகப் பங்குதாரர், ஆர்.பாலசந்தர் ராஜா, கார்ப்பரேட் எக்ஸ்கியூடிவ் செஃப் சீதாராம் பிரசாத், சென்னை ஜி.ஆர்.டி ஹோட்டல் & ரிசார்ட்ஸ், ஜூனியர் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செஃப் என்.கண்ணன், சென்னை தாஜ் விமான சமையலறை முன்னாள் நிர்வாக செஃப், கேரளா (சிகா) செஃப் ராமு பட்லர், செஃப் அஜித் ஜனர்த்தனன், கோயம்புத்தூர் ரெசிடென்சி டவர்ஸ் மற்றும் சிக்கா ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு கல்லூரி நிர்வாகத் தலைவர் சூர்யகுமார் தலைமை வகித்து வரவேற்றார். கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். உணவு மேலாண்மைத் துறை துறைத் தலைவர் சார்லஸ் ஃபேபியன் கோயம்புத்தூர் தி ரெசிடென்சி டவர்ஸ் ரோஹித் மாலிக், கோயம்புத்தூர் வெல்கம் ஹோட்டல் ஜி.எம் போன்ற சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுச் சிறப்பு விருந்தினர் அறிமுகம் வழங்கினார். நிகழ்வின் நிறைவாக பேபியன் சார்லஸ் நாதன் நன்றி வழங்கினார்.