ஆர்.வி கல்லூரியின் விளையாட்டு விழா

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ. பள்ளியில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி அங்கிருந்து நடையோட்டமாக கல்லூரியை வந்தடைந்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் சுகுணா முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து கபடி, கால்பந்து, கைப்பந்து, ஈட்டி எறிதல், வட்டெறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், தொடர் ஓட்டம் ஆகிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் கல்லூரி முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் திருப்பதி அவர்கள் செய்திருந்தார்.