மான்செஸ்டர் இன்டர்நேஷனல் ஸ்கூல் இணைந்து நடத்திய மஹாத்மா காந்திஜியின் 150 வது ஆண்டுவிழா மற்றும் இந்திய குடியரசு விழா

தாய்லாந்து தூதரகம் சென்னை, இந்தோ தாய் கல்ச்சுரல் (ITECF) அமைப்பு மற்றும் மான்செஸ்டர் இன்டர்நேஷனல் ஸ்கூல் இணைந்து நடத்திய “மஹாத்மா காந்திஜியின் 150 வது ஆண்டுவிழா” மற்றும் “இந்திய குடியரசு விழா” கோயமுத்தூர் மான்செஸ்டர் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான தாய்லாந்து தூதர் மேன்மைபொருந்திய நிதிருஜெ போனோப்ரெசெர்ட் அவர்கள், சர்வதேச கலாச்சார அமைப்பின் தலைவர் திரு. பி. ராஜகோபால் அவர்கள், முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு. ராஜ்குமார் அவர்கள், RDO டிரஸ்ட் செயலர் Dr. NK பெருமாள், மான்செஸ்டர் இன்டர்நேஷனல் ஸ்கூல் சேர்மன் பி.எஸ்.மூர்த்தி மற்றும் தாளாளர் பிரியா மூர்த்தி ஆகியோருக்கு மஹாத்மா காந்தி சர்வதேச விருது வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய இந்தியாவிற்கான தாய்லாந்து தூதர் இந்தியா மற்றும் தாய்லாந்துக்கும் உள்ள வரலாற்று உறவு, தாய்லாந்து மொழியிலுள்ள இந்திய மொழியின் தாக்கம், கலாச்சார ஒற்றுமைகள், 2,50,000 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தாய்லாந்தில் வாழ்வது, இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கு இடையே தூதரக உறவு இந்திய சுதந்திர தினத்திற்கு சற்று முன்னதாகவே (1/8/1947) தொடங்கியது, இந்திய கடவுள்களை தாய்லாந்து மக்கள் இன்றும் வழிபட்டு வருவது, தாய்லாந்தில் உள்ள இந்து மற்றும் புத்த கலாச்சாரத்தின் பிரதிபலிக்கும் கட்டிட கலை, ஆகியவைப்பற்றி விரிவாக பேசினார். இதுபோன்ற கலாச்சார நிகழ்வுகள் இந்திய தாய்லாந்து உறவு மேம்பாட்டுக்கான வாய்ப்பாக அமையுமென்றும், தாய்லாந்து மாணவர்கள் இந்தியாவில் படிக்க மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பள்ளிக்குழந்தைகளுடன் மிகவும் அன்புடன் கலந்துரையாடியதோடு மட்டுமல்லாது அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.