‘மக்கள் பிரச்னைகளை சரி செய்யவே நாங்கள் பிறந்துள்ளோம்’

பாரதிய ஹிந்து பரிவார் மாநில செயலாளர் முத்துசாமி…

‘பாரதிய ஹிந்து பரிவார் இயக்கம் நடத்தும் மகா யாகம் கரூரில் நடைபெறுகிறது. வாழ்வில் பல்வேறு இன்ப, துன்பங்களை எதிர்கொண்டாலும், சில குழப்பங்கள் எப்போதும்  நம் மனதில் இருக்கும். இந்நிலையில் நமது மண்ணின் ஆன்மிக உண்மைகளை ஆராய்ந்து பார்க்கும்போது, நமது ஒவ்வொரு துன்பத்துக்கும் சில யாகங்கள் மூலமாக நற்பலன்களை அடைய முடியும் என்பது வரலாறாக உள்ளது. இயற்கைக்கு எதிரான விஷயங்களுக்கும், மக்களின் துன்பங்களை நிவர்த்தி செய்வதற்கும் சரியான நேரத்தில் சரியான தருணத்தில் யாகங்கள் வளர்ப்பதால் ‘பாஸிட்டிவ் வைப்ரேஷனை’ கொண்டு வந்து நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது செய்யலாம்.

வெறும் யாகம் செய்வதால் மட்டுமே அதற்கான பயன் நமக்கு உடனே கிடைக்கப்போவது இல்லை. நம் உழைப்பும் நேர்மையும் சரியான இடத்தில் வெற்றி பெற பாஸிட்டிவ் வைப்ரேஷன் தேவைப்படுகிறது. ஆன்மிகம் நம் நாட்டின் கலாச்சார வரலாறு. நம் முன்னோர்கள் வாழ்வில் நலம் பெற பல யாகங்கள் செய்து, மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க காரணமாக இருந்துள்ளார்கள் என்பது உண்மை.

விஞ்ஞானம் வளர்ச்சி பெறாததற்கு முன்பே ஆகாயத்தில் இருக்கும் கோள்களை சரியாகக் கணக்கிட்டு தங்களது வாழ்க்கையை நடத்தியவர்கள் நமது முன்னோர்கள். வரும் காலங்களில் நாம் ஆன்மிகத்தில் உள்ள நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அது நமக்கு மிகப்பெரிய கடமை ஆகும். இயற்கை, விவசாயம், கல்வி, மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் இவை அனைத்திற்கும் பாரதிய ஹிந்து பரிவார் இயக்கம் எப்போதும் உறுதுணையாக இருக்கும். மக்களின் அடிப்படை குறைகளைக் கேட்டறிந்து அவற்றை சரி செய்ய எப்போதும் காத்திருக்கிறது, எங்களது இயக்கம். சமூகப் பொறுப்புள்ள இளம் நெஞ்சங்களுக்கு எங்கள் அலுவலகக் கதவு எப்போதும் திறந்திருக்கும். மக்கள் பிரச்னைகளை சரி செய்யவே நாங்கள் பிறந்துள்ளோம்.

பாரதிய ஹிந்து பரிவார் இயக்கத்தின் மாநிலத் தலைவர் செல்வகணேஷ் அவர்களுடன் பல தருணங்களில் உரையாடும்போது, மக்களுக்கு நம் இயக்கத்தின் மூலமாக ஓர் தெளிவான பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பேசுவோம். அப்போதெல்லாம் என் கருத்து எதுவாக இருந்தாலும் அதனைத் தட்டிக் கழிக்காமல் என் உணர்வுக்கு உயிர் கொடுத்து, மக்கள் பயன்தான் நமக்கு முக்கியம் அதை உடனே சரி செய்யுங்கள், உதவிகள் செய்வதற்கு எதற்கு அனுமதி என்று கேட்பார். அவருக்கு இந்நேரத்தில் எனது நன்றி.

கரூரில் நடக்கும் இந்த யாகம், இயற்கை விளைவுகள் வராமல் தடுப்பது, விவசாயம் எப்போதும் செழித்திருக்க, மக்கள் மனதில் எப்போதும் சந்தோசம் கொட்டிக¢ கிடக்க, சரியான நேரத்தில் மழை பெய்ய, குடும்ப வாழ்வில் அனைவரும் பயன்பெற இந்த யாகம் உறுதுணையாக இருக்கும். கோபத்தை உதைத்து, நட்பை பலப் படுத்தி, முகத்தில் புன்னகையை உண்டாக்கி வாழ்வில் எல்லாரும் நலம்பெற வேண்டி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.’