வெரிக்கோஸ் வெயின் பாதிப்புக்கு அரசு மருத்துவமனையில் தீர்வு

கடந்த ஆறு மாதங்களில் 42 பேருக்கு வாஸ்குலார் அறுவை சிகிச்சைகளை, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்த்துள்ளனர். நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்பவர்க்கு வரகூடிய நோய், வெரிக்கோஸ் வெயின். இந்நோய் ஏற்பட்டால், காலில்  தாங்க முடியாத வலி, வீக்கம், ரத்த நாளங்கள் உடைந்து ரத்த கசிவு ஏற்படும். இத்தகைய வெரிக்கோஸ் வெயின் நோய்க்கு, அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்துவந்தது. ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே ரேடியோ அதிர்வலைகள் மூலம் சிகிச்சை அளிக்கும் நவீன தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இத்தகைய நவீன தொழில்நுட்பம், கோவை அரசு மருத்துவமனையில் இந்தாண்டு துவங்கப்பட்டது. அதன்பின் பல்வேறு நபர்களுக்கு, இச்சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களில், ‘ரேடியோ பிரீக்குவன்சி அப்ளேஷன்’ மற்றும் ‘ஸ்கெலிரோதெரபி’ எனும் இரு அறுவை சிகிச்சை முறைகள் மூலம் 42 பேருக்கு அரசு மருத்துவமணை டாக்டர்கள் வெற்றிகரமாக தீர்வு கொடுத்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது, வெரிக்கோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு அளிக்கும், ‘ரேடியோ பிரீக்குவன்சி அப்ளேஷன்’ மற்றும் ‘ஸ்கெலிரோதெரபி’ எனும் சிகிச்சைகள், அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன. இதற்காக பாதிக்கப்பட்ட இடத்தில், பிரத்யேக கருவி பொருத்தப்பட்டு துல்லியமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர். கடந்த ஆறு மாதங்களில், இவ்விரு சிகிச்சை வாயிலாக, 42 பேருக்கு தீர்வு கிடைத்துள்ளது.