கோவையில் அதிநவீன சமையலறை இயந்திரங்கள் அறிமுகம்

உணவு தயாரிப்பு இயந்திரங்களின் பிரபல நிறுவனமான EssMmm கார்ப்ரேஷனின், “காஸ்மாஸ்” பிராண்ட்-ல் ” காஸ்மாஸ் குக்வோக் பிரைம்” என்ற பெயரில் அதிநவீனமான, மேம்படுத்தபட்ட உணவு தயாரிப்பு இயந்திரங்களை அறிமுகம் செய்தனர். இந்த உணவு தயாரிப்பு இயந்திரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய EssMmm கார்ப்ரேஷனின் நிறுவனர் சதீஷ்குமார், ‘மக்களின் வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பது உணவு, அதனால் உணவு சம்மந்தப்பட்ட கருவிகளை தயாரித்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம், எங்களது தயாரிப்பு இயந்திரங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பனதாகவும், எரிபொருள் சிக்கனம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

எங்களுடைய உணவு இயந்திரங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன், மிக பிரபல நிறுவனங்களான கூகுள், தலப்பாகட்டி ஓட்டல்கள், மைக்ரோசாப்ட், எல் அண்ட் டி, ஸ்ரீ அன்னபூர்ணா ஓட்டல்கள், இஸ்கான், ஏ2பி ஓட்டல்கள் மற்றும் பிரபலமான மருத்துவமனைகள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் போன்ற இடங்களில் தங்களுடைய உணவு தயாரிப்பு இயந்திரங்களை பயன்படுத்தி உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் EssMmm கார்ப்ரேஷனின் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிறுவனத்தின் அலுவலர்கள் உடனிருந்தனர்.