முழங்கால் பராமரிப்பு மீது விழிப்புணர்வை உருவாக்கும் ஆர்த்தோ-ஒன்

ஆரோக்கியமான முழங்கால்களுக்கு சைக்கிள் ஓட்டுவது சிறந்தது!

மூட்டுகள் தேய்மானத்தின் காரணமாக 65வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 80மூத்தினர் ஆர்த்ரிட்டிஸ் என அழைக்கப்படும் மூட்டு வீக்கத்தினால் அவதியுறுவதற்கான சாத்தியம் இந்தியாவில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எலும்புகளின் வலுவை மேம்படுத்த உதவுவதால் சைக்கிள் ஓட்டுவது ஆரோக்கியமான பயிற்சிகளுள் ஒன்று என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முடநீக்கியவியலில் சிறப்பு சிகிச்சை மையங்களுள் ஒன்றாகத் திகழும் ஆர;த்தோ-ஒன், முழங்கால் மூட்டு பராமரிப்புமீது விழிப்புணர்வை அதிகரிக்கவும் மற்றும் சைக்கிள் ஓட்டுவதன் வழியாக அதனால் கிடைக்கும் பலன்களை மக்கள் அறியச் செய்வதற்கும் சைக்கிள் ரேலி ஒன்றை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய ஆர்த்தோ-ஒன் நிறுவனத்தின் நிறுவனரான டாக்டர்.டேவிட் ராஜன், ’40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் எதிர்கொள்கின்ற பொதுவான எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சனைகளுள் ஒன்றாக முழங்கால் கீல்வாதம் (மூட்டு வீக்கம்) இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட இள வயதினர் மத்தியில்கூட இந்நோய் பாதிப்பு இருப்பது காணப்படுகிறது. கீல்வாதம் ஃ மூட்டுவீக்கம் ஏற்படாமல் முற்றிலுமாக தடுத்துவிட இயலாது என்றாலும்கூட தொடர்ச்சியான உடற்பயிற்சியின் வழியாக இந்நோய் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க முடியும் மற்றும் இப்பாதிப்பு நிகழ்கின்ற காலத்தை தாமதிக்கச் செய்து தள்ளிப்போட முடியும். குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிற உடற்பயிற்சியாக இருப்பதால், கால் தசைகளை வலுப்படுத்தவும், தாங்கும் உறுதியை மேம்படுத்தவும் சைக்கிள் ஓட்டுவது பரிந்துரைக்கப்படுகிறது,” என்று கூறினார்.

இதயம், நுரையீரல்கள் மற்றும் இரத்தநாளங்களின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவுகிற ஒரு ஏரோபிக் உடற்பயிற்சிபோல் சைக்கிள் ஓட்டுவது இருப்பதால், நமது உடலுக்கு ஒட்டுமொத்த உடற்தகுதியையும், திறனையும் இது வழங்குகிறது. சைக்கிள் ஓட்டுவதை ஒரு தொடர்ச்சியான வழக்கமாகக் கொண்டிருப்பது முழங்கால் பகுதியிலுள்ள வலியை குறைக்கவும் மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள தசையின் சக்தியை மீண்டும் நிலைநிறுத்தவும் மற்றும் நிலைப்புத்தன்மையை மறுபடியும் பெறவும் உதவுகிறது. ‘உறுதியான தசைகள் மற்றும் எலும்புகளைப் பெறுவதற்கு பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சியாக சைக்கிள் ஓட்டுவது இருக்கின்றபோதிலும், முறையற்ற வழிமுறைகளில் சைக்கிள் ஓட்டுவது முழங்கால் மீது எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சிறப்பான எலும்பு ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு சைக்கிள் ஓட்டும்போது உடலை வைத்திருக்கும் முறை, வேகம் மற்றும் சைக்கிள் ஓட்டுகின்ற காலஅளவு ஆகியவை ஒருங்கிணைந்து முக்கியமான பங்கை ஆற்றும் காரணிகளாக இருக்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

உடற்பயிற்சி கூடங்களில் மேற்கொள்ளப்படுகிற பிற உடற்பயிற்சிகளைப்போல் அல்லாமல் சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரு மகிழ்ச்சியான, குதூகலமளிக்கும் உடற்பயிற்சியாக இருப்பதாகவும் அறியப்படுகிறது. நீண்டநேரம் பெடல் செய்து சைக்கிள் ஓட்ட இயலாதவர்களுக்கு, சில நேரங்களில், நிலையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சைக்கிளை ஓட்டுவது பரிந்துரைக்கப்படுகிறது.

சமநிலையின்மை மற்றும் கீழே விழுவது போன்ற பிரச்சனைகளைக் கொண்டு கீல்வாதத்தால் அவதியுறுகிற நபர்களுக்கு நிலையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சைக்கிளை ஓட்டுவது ஃ கிடைநிலையில் வைத்துள்ள சைக்கிளை ஓட்டுவது பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில் வெளியிடங்களில் சைக்கிள் ஓட்டுவதை தவிர்க்க முடிவதோடு முழங்கால் மூட்டுகளுக்கு உடற்பயிற்சியும் கிடைக்கிறது. ஆரோக்கியமான முழங்கால்களைக் கொண்டிருப்பதற்கு சைக்கிள் ஓட்டுவதனால் கிடைக்கும் ஆதாயங்கள் மீது விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த சைக்கிள் ரேலியை நடத்த வேண்டும் என்ற முடிவை ஆர்த்தோவில் உள்ள நாங்கள் எடுத்தோம். எம் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் ஆகியோர் அடங்கிய எமது சமூகத்திற்கு சைக்கிள் ஓட்டுவதில் பலனை முன்னிலைப்படுத்துவதே எமது ஆரம்ப குறிக்கோளாக இருக்கிறது.

அத்துடன், பொதுமக்களுக்கும் இச்செய்தியினை கொண்டுசெல்ல வேண்டும் என்பது எமது நோக்கமாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.