நவம்பர் 1, ‘தமிழ்நாடு தினம்’

தமிழ்நாட்டில் ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை முக்கிய தினமான பண்டிகைகள், தலைவர்களின் பிறந்த நாள்கள், தெய்வ வழிபாட்டு நாட்கள், அரசு, மருத்துவமனை என பல துறைகள் வருடத்தின் ஏதாவது ஒரு நாளை சிறப்பிக்கும் வகையில் கொண்டுள்ளன. இவை உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது.

இதே போல தமிழ் நாட்டை தனித்துவமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக முதல்வர், நவம்பர் 1ம் தேதி முதல் ஆண்டுதோறும் “தமிழ்நாடு தினம்” கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.