தோல்வி என்பது முடிவல்ல முதலாவது முயற்சி – விங் கமாண்டர், ஏ. சதிஷ்குமார்

கோவை பாலக்காடு சாலையில் திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ளது நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  முதலாம் ஆண்டு மாணவ மாணவியார்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பி. அனிருதன்  வரவேற்றார். நேரு கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான பி. கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பேசியபோது :- நமது நேரு கல்வி குழுமம் சார்பில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் சிறப்பாக கல்வி சேவையாற்றி வருகின்றது. நேரு குழுமம் கல்வி நிறுவனங்களை அமைத்து, கடந்த 50 ஆண்டுகளாக கல்விப்பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது. இன்று எங்கள் கல்வி குழுமத்தில் இணைந்து இருக்கும் மாணவ மாணவியர்களை அன்புடன் வரவேற்கிறோம். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. இரு சக்கர வாகனங்களை வாங்கித் தருவது பாதுகாப்பானதல்ல. கட்டாயம் ஹெல்மட்டை அனிய வலியுறுத்துவது அவசியம். தேவையறிந்து செலவுக்கு பணம் தந்தால் போதும். மாணவர்கள் பாடப்படிப்பு தவிர பிற கலை, கலாச்சார, விளையாட்டுகளில் சேர பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். மத்திய அரசின், புராஜக்ட் நிதியுதவியான 2.50 லட்சம் ரூபாய் பெற்று புதிய கண்டுபிடிப்புகளுக்கான புராஜக்ட்டை பெற ஊக்கப்படுத்த வேண்டும். தொழில், வணிகரிதியிலான ஆய்வுக் கூடத்தைப் பயன்படுத்த உத்வேகம் அளிக்க வேண்டும். மாணவர்கள் சமூக ஊடக பயன்பாட்டை குறைத்து முழு மூச்சில் படிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி நிலைப்பாட்டினைப் பற்றி ஆசிரியர்களிடம் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களின் கல்வி தரம் குறித்து கல்லூரிக்கு எப்போழுது வேண்டுமானாலும் வரலாம். மாணவர்களின் வருங்கால கல்வி கனவினை நிறைவேற்ற நேரு கல்விக்குழுமம் எப்போழுதும் தயாராக உள்ளது. மாணவர்களுக்கு படிப்பு மற்றும் விளையாட்டு துறைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. மாணவர்கள் கல்வி பயிலும் பொழுது விளையாட்டுத்தனமாக இல்லாமல் பொறுப்புடன் படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும். இங்கு பயின்ற பல மாணவர்கள் பல பெரிய நிறுவனங்களில் சிறப்பான பணியில் வேலையில் உள்ளனர். அவர்களை போல் நீங்களும் சிறப்பாக கல்வி பயின்று சிறந்த தொழில் அதிபர்களாகவும், அரசு அதிகாரியாகவும், பெரிய பல நிறுவனங்களில் உயர் பதவிகளில் சேரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தலைமை விருந்தினராக புது டெல்லி, இந்திய விமானப்படையின், விங் கமாண்டர், ஏ. சதிஷ்குமார் கலந்து கொண்டு பேசியபோது :- வாழ்க்கைப் பயணத்தின் முதல் நாளான, உங்களுக்கு இது அமைந்துள்ளது. பள்ளிக் கல்வியை விட்டு, கல்லூரிக் கல்விக்கு வரும் போது உங்கள் அறிவின் எல்லை விரியத் தொடங்குகிறது. உங்களது லட்சிம் தான் உங்களை உயர்த்தும். புதிய ஆய்வுக் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிக் கூட்டங்களில் அல்ல, உங்கள் மூலைகளில் தான் உள்ளது. சுற்றியிருப்பவர்களைப் பொருட்படுத்தாமல், உங்கள் காரியத்தில் மட்டும் கவனம் குவியுங்கள். சூழலுக்குச் சோர்வடையாமல், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வி என்பது முடிவல்ல முதலாவது முயற்சி என்று எடுத்துக்கொள்ள வேண்டும். தேவை, பேராசை இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த பத்தாண்டுகளுக்குள் ஏராளமான புதிய நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அதில் ஓயோ, ப்ளிப்கார்ட் போன்றவை சர்வதேச அளவில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. வாய்ப்புகளை வேகமாகப் பயன்படுத்திக் கொள்வதே இதற்குக் காரணம். பாதுகாப்புத்துறையில் எந்த உதவியும், தகவல் ரீதியாகத் தேவைப்பட்டால் எங்களை இந்த கல்லூரி மூலம் அனுகலாம் என்று கூறினார்.

கௌரவ விருந்தினராக கோயம்புத்தூர், காக்னிசென்ட் டெக்னாலஜி நிறுவனத்தின், உதவி துணைத் தலைவர் மிஸ்.மாயா ஸ்ரீகுமார் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினராக நேரு கல்லூரியின் முன்னாள் மாணவியும், திருவனந்தபுரம், யுஎஸ்டி குளோபல் நிறுவனதின், மென்பொருள் அபிவிருந்தியாளருமான மிஸ்.ஆஷா ரமேஷ் கலந்து கொண்டானர்.

விழா முடிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் கவிதா நன்றி கூறினார்.