“ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும், ஆதவன் மறைவதில்லை”

– குழந்தைத் தொழிலாளர்கள் தினம் – ஜூன் 12

இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், இன்றும் பசி, பட்டினி, பஞ்சம் தலை விரித்தாடுகிறது. ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு குடும்ப தலைவரின் உழைப்பு மிக முக்கிய பங்காக இருக்கிறது. இப்பங்கு வளர்ந்து வரும் தலைமுறைக்கும், சமுதாயத்திற்கும் இன்றியமையாதது.

உலகம் முழுவதும் ஜூன் 12, குழந்தை தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஒரு குழந்தை, குடும்ப சூழ்நிலைக்கேற்ப வளர்கிறான், வாழ்கிறான். அப்போது அவனுக்கு பணத்தின் மீது மோகம் ஏற்படுகிறது. பள்ளிப்படிப்பு,  உயர்கல்வி, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு என முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டிய குடும்பம் வறுமையை நோக்கிச் செல்கிறது.

“ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும், ஆதவன் மறைவதில்லை” என்றத்திற்கேற்ப, குழந்தைத் தொழிலாளர்கள் அன்றாட வாழ்வில் நம் கண்களில் பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

பெற்றோர் இல்லாத குழந்தைகள் வறுமையை போக்க உழைக்க வருவது ஒரு பக்கம் இருந்தாலும், ஒழுக்கமற்ற பெற்றோரே பணத்திற்கு ஆசைபட்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது மற்றொரு பக்கம் வருத்தத்தை அளிக்கிறது.

யூனிசெப் ( UNICEF ) அறிக்கையின்படி,  உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட 158 மில்லியன் சிறுவர், சிறுமியர் ( வீட்டுவேலை, டீ கடை, மெக்கானிக் செட், செங்கல் சூலை, பட்டாசுத் தொழிற்சாலை,  பனியன் கம்பெனி, ஹோட்டல், சிக்னல்களில் பொருட்களை விற்பது என ) வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஐ.நா., குழந்தைகள் உரிமை பாதுகாப்பின் உடன்படிக்கை 32வது விதியில் ” அபாய தொழில்கள், கல்வியை பாதிக்கும் தொழில்கள், குழந்தைகளின் உடல், மனம்,  பழக்கவழக்கத்தில் அபாயம் தரும் தொழில்கள் மற்றும் சமூக மேம்பாட்டைத் தடுக்கும் தொழில்களில் ஈடுபடுவதை மாநிலக் காட்சிகள் கண்டறிய வேண்டும்”.

படிக்கும்போது படித்து, உழைக்கும் வயதில் உழைத்தால் வாழ்க்கை இனிக்கும் என்பது நம் முன்னோர்களின் வாக்கு. ஆனால் உழைக்கும் வயதில் உழைக்காத சில பெற்றோரால் பாலிய வயதில் உழைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் பல லட்சம் குழந்தைகள்.

எனவே, குழந்தைத் தொழிலாளர்களை மீட்போம் ! சமுதாயத்தைக் காப்போம் !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*