பிஎஸ்ஜி மருத்துவமனையில் வால்வு மாற்று அறுவை சிகிச்சையின் புனர்வாழ்வு விழா

கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் 5000 நபர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்தும் இந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிஎஸ்ஜி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று கோவை பி எஸ் ஜி மருத்துமனையில் இரத்தநாள அறுவை சிகிச்சைத்துறை மற்றும் இருதய நலத்துறை சார்பாக மூன்றாம் ஆண்டு வால்வு மாற்று அறுவை சிகிச்சை கருத்தரங்கம் மற்றும் புனர்வாழ்வு விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் இருதயம் பற்றியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டாக்டர் முருகேசன் எழுதிய இருதயத்தின் மின்சாரம் என்ற புத்தகத்தை வெளியிட்டனர். இதில் இருதய மாற்று அறுவை சிகிச்சை பயனாளிகளுக்கு நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மரக்கன்றுகளை வழங்கினார். இதன் பின் இருதய வாழ்வு சிகிச்சை சார்ந்த கண்காட்சியை பொது மேலாளர் அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், பயனாளிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.