கட்டைமீசை, நீல கண்கள், தலையில் தொப்பி அவன்தான் நான்

ஒரே விதமான இரண்டு மீசைகள், உலகத்தை திரும்பி பார்க்க வைத்தது, ஒருவன் கொடுமைக்காரன், ஒருவன் குறும்புக்காரன். இதில் ஒருவன் மற்றவர்களை காயப்படுத்தி ஆனந்தம் கொள்பவன்,மற்றொருவன் தன்னை காயப்படுத்தி மகிழ்விப்பான்.

அவன் தான் சார்லி சாப்ளின், கட்டைமீசை, தலையில் தொப்பி ,கையில் தடி,( அதுமட்டுமல்லாமல் நீல கண்கள்,சதுரங்க ஆட்டக்காரர் ) என்று தனக்கென அழிக்க முடியாத அடையாளம் கொண்டவன். சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின்  ஏப்ரல் 161889 அன்று பிறந்தார், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் யாருக்கும் தெரியாத இன்னொரு முகமும் உள்ளது.நாம் பார்த்தது புன்னகை மட்டுமே நிறைந்த முகம், மற்றோன்று புண்ணாகி காயம் பட்ட முகம், இதனை மறைத்து நம்மை மகிழ்வித்த மனிதன் அவன்.திரையுலகில் கீஸ்டோன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி வாரம் 150$ ஊதியம் பெற்ற அவன்,தனது நான்காவது படத்தில் (1917- ல்) 1 மில்லியன் டாலர் ஊதியம் பெற்றார் அவர்,உலகில் 1 மில்லியன் ஊதியம் பெற்ற நடிகர் இவர்தான்.

அதுமட்டுமில்லாமல் சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

தனது வாழ்க்கையில் பல அவமானங்களை கண்டிருந்தாலும், பல துயரங்கள் கொண்டிருந்தாலும்  அதனை மறைத்து இவ்வுலகத்தை  சிரிக்கவைத்த அவர் மறைந்தாலும்,உன்முகம் மறையாது,உன் அடையாளம் மறக்காது.