மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மதநல்லிணக்க கருத்தரங்கம்

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர். சாலையில் அமைந்துள்ள ஜே.கே.ஹோட்டல் அரங்கில் இந்திய கலாச்சார நட்புறவு இயக்கம் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் “மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மதநல்லிணக்க கருத்தரங்கம்” திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் பல் சமய நல்லுறவு இயக்கம் மாநில தலைவர் ஹாஜி முகமது ரஃபி, சாயிபாபா காலனி பகுதி திமுக செயலாளர், பல்சமய நல்லுறவு இயக்கம் மாநில துணைச் செயலாளர் கே.எம்.ரவி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.