திருப்பூரில் முதல்முறையாக கே.ஜி மொபைல் பிசியோதெரபி துவக்கம் 

திருப்பூரில் அமைத்துள்ள கே.ஜி. பிசியோதெரபி மையம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக மொபைல் பிசியோதெரபி துவங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு கே.ஜி. மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மொபைல் பிசியோதெரபி வாகனத்தை துவக்கி வைத்தார்.