காணும் திசையெங்கும் பி.எஸ்.ஜி ‘நியூ இண்டியா டிபேட்ஸ்’ நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பேச்சு

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமையன்று ‘நியூ இண்டியா டிபேட்ஸ்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி. அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சருமான அனுராக் சிங் தாகூர் கலந்துகொண்டார்.

  கல்லூரி முதல்வர் பிருந்தா இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினர்.  அனுராக் சிங் தாகூர் தனது சிறப்புரையில், ” 2012 யில் நான் முதன்முறையாக கோவைக்கு வருகை புரிந்தேன். அப்போது சாலையில் பயணிக்கும் போது காணும் திசையெங்கும் பி.எஸ்.ஜி. என இருந்தது. அந்த அளவிற்கு பி.எஸ்.ஜி அறநிலையம் ஏராளமான கல்விநிலையங்களை கொண்டுள்ளது.

இங்கு பயின்ற மாணவர்கள் பல பேர் தற்பொழுது உயர்ந்த பதவியில் சிறந்து விளங்குகின்றனர்” என்றார். மேலும் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை குறித்தும், இந்தியாவின் வளர்ச்சியை குறித்தும் விளக்கி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அதோடு முன்னதாக நடைபெற்ற வினாடிவினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார். விழாவின் நிறைவாக செயலர் கண்ணையன் நன்றியுரை வழங்கினார். நியூ இந்தியா டிபேட்ஸ் ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.