கிரிக்கெட் வீரர் தீபக்கின் டிநைன் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் துவக்கம் 

கிரிக்கெட் வீரர் தீபக் சஹர் டிநைன் ஸ்போர்ட்ஸ் (Dnine Sports) என்ற கிரிக்கெட் ஷூ தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இந்த டிநைன் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் ஷூக்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டிருப்பதோடு மட்டுமின்றி, சர்வதேச பிசியோதெரபிஸ்டுகள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து டிநைன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தீபக் சஹர் கூறியதாவது, டிநைன் நிறுவனம் விளையாட்டு உலகில் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்நிறுவனம் அதன் தயாரிப்புகளில் நிகரற்ற சொகுசு மற்றும் செயல்திறன் மேம்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பிராண்டில் அரை மற்றும் முழு ஸ்பைக் கொண்ட கிரிக்கெட் ஷூக்கள், ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் சட்டைகள், தொப்பிகள் மற்றும் பைகள் போன்ற தயாரிப்புகள் உள்ளது எனக் கூறினார்.