பி.எஸ்.ஜி. தேசிய அளவிலான தொடரில் வருமான வரி துறை வெற்றி

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டியின் தொடரில் வருமான வரித்துறை அணி சென்னை வெற்றிபெற்று 1 லட்சம் ரூபாயையும் பி.எஸ்.ஜி. கோப்பையையும் தட்டிச்சென்றது.

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 57-வது அகில இந்திய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 26 ல் தொடங்கி 30 ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெற்றது.

இந்த தொடரின் இறுதி போட்டியில் வருமான வரி துறை அணி சென்னையும் இந்திய இராணுவ அணி புது தில்லியும் மோதிக்கொண்டன. மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இந்திய கப்பல் படை அணி லோனாவாலாவும் இந்தியன் வங்கி அணி சென்னையும் மோதிக்கொண்டன.

இறுதிப்போட்டியில் வருமான வரி துறை அணி சென்னை 75 : 71 என்ற கணக்கில் இந்த தொடரின் முதல் இடத்தைப்பெற்றது. இரண்டாம் இடத்தை இந்திய இராணுவ அணி புது தில்லி பெற்றது.

இந்திய கப்பல் படை அணிக்கும் இந்தியன் வங்கி அணிக்கும் நடைப்பெற்ற போட்டியில் 79 : 72 என்ற கணக்கில் இந்திய வங்கி அணி மூன்றாம் இடத்தையும் இந்திய கப்பல் படை அணி நான்காம் இடத்தையும் பெற்றது.

கோவை மாவட்ட காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி. அறநிலையத்தின் நிர்வாக அரங்காவளர் எல். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த இறுதிச்சுற்றின் போட்டியை பார்வையிட்டனர். வெற்றிபெற்ற அணிக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பரிசளித்தார்.