தியாக நண்பர்கள் குழு சார்பில் முப்பெரும் விழா

கோவை தியாக நண்பர்கள் குழு பாலன் நகரில் சாதனையாளர் விருது வழங்குதல், குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் தியாக நண்பர்கள் குழு தலைவர் லட்சுமணன், கோவை தெற்கு துணை காவல் ஆணையாளர் சண்முகம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் கொரானா பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவையாற்றிய மருத்துவர்கள் சுகுமாரன், மயில்சாமி மற்றும் அரவிந்தன் ஆகியவர்களுக்கு ‘மருத்துவ சேவா ரத்னா’ விருது வழங்கப்பட்டது. மேலும் நிர்மலா கல்லூரி உதவி பேராசிரியர் மல்லிகாவுக்கு சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது.

சந்திரசேகர் மற்றும் பிற்பகல் செய்திதாளின் பதிப்பாளர் ஏடம் அப்பாத்துரை ஆகியோருக்கு ‘சேவா ரத்னா விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு சிறந்த என்.எஸ்.எஸ். யூனிட் விருதும், பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சிறந்த என்.சி.சி யூனிட் விருதும் வழங்கப்பட்டது.

மேலும், விழாவில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் காலிபர் உபகரணங்கள் வழங்கப்பட்டது. கண் பார்வையற்ற 10 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது