பி. எஸ். ஜி உடலுறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து திங்கட்கிழமையன்று உடலுறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பிருந்தா, செயலர் கண்ணையன், பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஷ்வரன், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரதீப், கார்டியோ தொராசிக் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதீப் மற்றும் ஆனந்தநாராயணன் ஆகியோர் உடலுறுப்பு தானம் செய்வதன் அவசியம் குறித்தும், இது சம்மந்தமான தங்களது அனுபவங்களையும் மாணவர்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது