மாணவர்கள் தலைமைப்பண்பும் , ஒழுக்கமும் வேண்டும் – நேரு சர்வதேச பள்ளியின் பதவியேற்பு விழா

நேரு சர்வதேச பள்ளியின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்பு தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மத்திய பாதுகாப்பு படைப்பிரிவின் துணைத் தளபதி ஜின்சி பிலிப் மற்றும் கௌரவ விருந்தினராக நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் எஸ்.கே. சிவபிரகாஷ், பள்ளியின் தாளாளர் சைதன்யா கிருஷ்ணகுமார், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

சிறப்புரை ஆற்றிய ஜின்சி பிலிப், “தலைமைப்பண்பு , ஒழுக்கம் ஆகிய பண்புகளை வளர்த்துக் கொள்வது மாணவர்கள் எதிர்கால தேசத்தின் நலனைக் கட்டமைக்க ஏதுவாக இருக்கும்” என மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

நிர்வாக செயல் அதிகாரி கிருஷ்ணகுமார், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் மாணவர் தலைவர்கள் அனைத்து நிலைகளிலும் முன்னோடியாக செயல்பட வேண்டும்” என்று கூறி தனது வாழ்த்துகளைத் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்றனர். மேலும் இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.