தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில்  சிறுகன்று பெருக்கம் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையத்தில் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி  தரமான நாற்றங்கால் பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் சிறுகன்றிலிருந்து நாற்று உற்பத்தி மற்றும் பராமரிப்பு முறைகள், உரம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை மற்றும் நாற்றங்கால் சான்றிதழ் பெறுவது பற்றிய தலைப்புகளில் நேரடியாக திறம்பட பயிற்சி அளிக்கப்படுகின்றது.

இப்பயிற்சி வகுப்புகள்  காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை  நடைபெறும். மேலும் ஒரு நபருக்கு ரூ.1000/- பயிற்சி கட்டணமாகப் பெறப்படுகிறது.

பயிற்சி கட்டணத்தை நேரடியாக அல்லது இணைவழியாக செலுத்தலாம். வங்கி கணக்கு எண் (A/C No 41671969408, IFSC SBI N0001384), முன்பதிவு அவசியம்.

விவசாயிகளின் முகவரி, தொலைபேசி மற்றும் பணம் செலுத்திய ரசீது, விவரங்களை கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு deanformtp@tnau.ac.in அனுப்ப வேண்டும்.