கோவையை சேர்ந்த மேஜிக் நிபுணருக்கு சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டம்

சர்வதேச மேஜிக் சொசைட்டி கூட்டமைப்பு சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் சர்வதேச அளவிலான மேஜிக் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. இதில் கோவையை சேர்ந்த இளம் மேஜிக் நிபுணர் தயாநிதி பங்கேற்று இந்த போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உள்ளார். இந்தியாவை சிறந்த ஒருவர் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும். கோவையை சேர்ந்த தயாநிதி இந்த பட்டத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உள்ளார். இது குறித்து பேசிய தயாநிதி, குழந்தை பருவம் முதலே மேஜிக் செய்வதில் ஆர்வம் கட்டி வருகின்றேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மேஜிக் செய்வதில் அனுபவம் உள்ளது. நிறுவனங்கள், விழாக்கள், மேடைகளில் தொடர்ந்து சிறப்பான மந்திர தந்திர காட்சிகளை நடத்தி வருகிறேன். சர்வதேச போட்டியில் 45 பேர் கலந்து கொண்டனர். அதில் சிறபான மந்திர செயல்களை செய்து பட்டம் வென்றேன் என கூறினார். ஏற்கனவே இந்தியாவின் கிரான்ட் சாம்பியன் அவார்டு வின்னர், இந்தியாவின் நம்பர் 1 மேஜிசியன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தயாநிதி பெற்று உள்ளார்.