கோவை கொடிசியாவில் (பேக்கர்ஸ் டெக்னாலஜி எக்ஸ்போ 2023)

கோவை கொடிசியாவில் உணவு மற்றும் பானம் உற்பத்தி , பேக்கரி தொழில் கண்காட்சி துவங்கியது. இதில் அரோமா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் R. பொன்னுசாமி மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அதிகாரி தமிழ்செல்வன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

இக்கண்காட்சியானது இன்று துவங்கி ஜூலை 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் உணவு மற்றும் பானம் செயலாக்கம் துறையின் இடப்பெற்றுள்ள வேளாண், மசாலா, பால், தினை மற்றும் தானியங்களின் தொழில்நுட்ப விநியோகத்திருக்கு இடப்பெற்றுள்ளது.

இவ்விழாவிற்கு மாதம்பட்டி நாகராஜ், ஜே.எம்.லாரன்ஸ் , அருண்குமார் (SKAL Club) , மற்றும் ரமேஷ் (SKAL Club) கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் 500 கும் மேற்பட்ட உணவு மற்றும் பானம் தயாரிக்க பயன்படும் தொழில்நுட்ப கருவிகள், உணவு வகைகள், பானங்கள் போன்றவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் உணவு மற்றும் பான தொழில் வழங்குநர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை ஒரு பொதுவான தளத்திற்கு அழைப்பது இதன் நோக்கமாகக் கொண்டு இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.

அரோமா நிர்வாக இயக்குநர் R. பொன்னுசாமி ” இந்த கண்காட்சியை SYNERGY Exposures தொடர்ந்து பத்து வருடமாக நடத்தி வருகிறார். மேலும் அவர் கூறுகையில் சென்ற வருடம் பிரமாண்டமாக இந்த கண்காட்சி நிகழந்தது . அதே போல இந்த வருடமும் கண்காட்சியை நடத்தி கொண்டு வருவதால் புதிதாக தொழில் முனைவோர்களையும் பொதுமக்களையும் கண்காட்சியை பயனுள்ளதாக்கி கொள்ளும்படி கூறி தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.